அணுவிலிருந்து இலத்திரன்களை படிப்படியாக அகற்றும் போது சக்தி மட்ட எண்ணிக்கை குறைவதுடன் சார்புக்கருவேற்றமும் அதிகரிப்பதனால் தொடர் அயனாக்கற் சக்திகள் தொடர்ந்து அதிகரிக்கின்றது.
ஆனால் உள்ளோடுகளில் இலத்திரன் அகற்ற ஆரம்பிக்கும் நிலையில் சடுதியான சக்தி அதிகரிப்பு நடைபெறும்.
Eg:- K இன் தொடர் அயனாக்கற் சக்திகள்
இது போன்று காபன், ஒட்சிசன், பொசுபரசு ஆகிய மூலகங்களின் தொடர் அயனாக்கற் சக்திக்குரிய வரைபுகள் பின்வருமாறு அமையும்.
தொடர் அயனாக்கற் சக்தி வரைபில் இருந்து பின்வரும் தகவல்களைப் பெறலாம்.
1. அணுக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சக்திமட்டங்கள் காணப்படுவதை ஆதாரப்படுத்துகின்றது.
2. கருவில் இருந்து வெளிச்செல்லுகையில் ஓடுகளுக்கிடைப்பட்ட சக்திவேறுபாடு குறைவடைந்து செல்வதை ஆதாரப்படுத்துகின்றது.
3. அணுவின் கூட்ட எண்ணைத் தீர்மானிக்கலாம். (ஆரம்பத்தில் காணப்படும் சீரான சக்தி அதிகரிப்புப் புள்ளிகளின் எண்ணிக்கை)
4. மூலகத்தின் ஆவர்த்தன எண்ணை அறியலாம். ( சடுதியான சக்தி அதிகரிப்பு க்களின் எண்ணிக்கையை விட ஒன்று அதிகமாகும்.)
No comments:
Post a Comment