இங்கு கலஎண்ணிக்கை அதிகரிக்கும் போது அதற்கு ஏற்றது போல் உடற்பரப்பு/ உடல்மேற்பரப்பு அதிகரிப்பு ஏற்படவேண்டும். ஆனால் அது சாத்தியப்படாது எனவே வினைத்திறனுடைய பதார்த்தப்பரிமாற்றம் நடைபெற விசேட இழையங்களினால் ஆக்கப்பட்ட தொகுதிகள் அவசியமாகின்றது.
Note:-
1. வளர்ச்சியின் போது பிரிவடைந்த கலங்கள் அவை குறித்த தொழில் or
தொழில்களுக்காக வியத்தமடைகின்றன.
2. தாவரங்களின் பல இழையங்கள் இணைந்து தாவரங்களில் இழையத்
தொகுதியொன்றை உருவாக்கும்.
Eg :- காழ், உரியம்
3. விலங்குகளின் பல இழையங்கள் இணைந்து விலங்குகளில் இழையத்
தொகுதியொன்றை உருவாக்கும்.
Eg :- கண், காது, நாக்கு, தோல், இரப்பை
4. உயிரங்கிகளின் வாழ்வு என்பது உயிர்த்தொழிற்பாடுகளின் ஒழுங்கமைப்பே ஆகும். இவ்வொவ்வொரு தொழிற்பாட்டையும் மேற்கொள்ளவென பல அங்கங்கள் சேர்ந்து உருவாகிய தொகுதிகள் காணப்படுகின்றது. இவை அங்கத் தொகுதிகள் எனப்படும்.
Eg :- உணவுக்கால்வாய்த் தொகுதி, சுவாசத்தொகுதி
உடற்தொழிற்பாட்டுக்கு தொகுதிகளின் இன்றியமையாமை
1. இனப்பெருக்கத்தொகுதி
அங்கிகள் தமது இனத்தின் நிலவுகையை உறுதிப்படுத்துவதற்காக
இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.
2. சுவாசத்தொகுதி
இனப்பெருக்கம் மற்றும் ஏனைய உயிர்த்தொழிற்பாடுகளை மேற்கொள்ளத்
தேவையான சக்தியைப் பெறுவதற்கு அவை சுவாசத்தில் ஈடுபடும்.
இவற்றிற்கு மூலப்பொருட்களாக போசனைப் பாதார்த்தங்கள்
விளங்குகின்றன.
3. கழிவகற்றும் தொகுதி
உயிர்த்தொழிற்பாடுகளின் போது கழிவுப்பொருட்கள்
உருவாக்கப்படுகின்றன. அவற்றை
உடலில் இருந்து அகற்றுவதற்காக இத்தொகுதி காணப்படுகின்றது.
4. நரம்புத்தொகுதி & அகஞ்சுரக்கும் தொகுதி
அங்கிகளின் தூண்டல்களுக்கு ஏற்ப துலங்கல்களைக் காட்டும்
தொகுதி (நரம்புகள்/ ஓமோன்கள்)
5. வன்கூட்டுத்தொகுதி
அங்கிகள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயரவும்
உடலைத்தாங்கும் தொழிற்பாட்டையும் மேற்கொள்கின்றது.
Note:-
1.சூழலில் வெற்றிகரமாக வாழ்வதற்கு அங்கிகள் இடையறாது
போராடுகின்றன. சூழலுக்குப் பொருத்தப்பாடு உடையதும், வினைத்திறனாக
உயிர்த் தொழிற்பாடுகளை மேற்கொள்வதுமான அங்கிகள் இப்
போராட்டத்தில் வெற்றிபெறும் இது “ தக்கன பிழைத்தல் தகாதன மடிதல்”
எனும் Charls Darwin இன் கூர்ப்புக் கொள்கையின் வாசகத்திற்கமைவாக
நடக்கின்றன.
2. உயிரங்கிகளின் பருமனும், சிக்கற்தன்மையும் அதிகரிக்கும் போது
உடலினுள் செல்லவேண்டிய, மற்றும் உடலில் இருந்து
வெளியேற்றப்படவேண்டிய பதார்த்தங்களின் அளவும் அதிகரிக்கும் மேலும்
உடலினுள் அப்பதார்த்தங்கள் அதிக தூரத்திற்கு எடுத்துச்செல்லப்படவும்
வேண்டும். எனவே பரவல் மூலம் நடைபெறும் பதார்த்தப் பரிமாற்றச்
செயல்முறை பல்கல அங்கிகளில் வினைத்திறனான பரிமாற்ற முறையாக
அமையாது.
3. உடலில் ஓரு இடத்தில் இருந்து இன்னோரிடத்திற்கு அமுக்கப்
படித்திறனூடாக நடைபெறும் பதார்த்தங்களின் பாய்ச்சல்
திணிவுப்பாய்ச்சல் எனப்படும்.
4. உணவுக்கால்வாய்த்தொகுதி, சுவாசத்தொகுதி, சுற்றோட்டத்தொகுதி,
கழிவகற்றும் தொகுதி ஆகியவை அனைத்திலும் திணிவுப்பாய்ச்சல்
நடைபெறும். இதனால் பிரதான உடற்செயற்பாடுகள் வினைத்திறனாக
நடைபெறும் எனவே அங்கிகளின் நிலவுகைக்காகவும் சூழலின்
வெற்றிகரமான வாழ்விற்காகவும் சிக்கலான பல்கல அங்கிகளில்
உயிர்தொழிற்பாடுகளை மேற்கொள்ள இவ் அங்கத்தொகுதிகள் மிக
அவசியமானவை.
No comments:
Post a Comment