குருதிக்கலங்கள்
1. செங்குருதிச் சிறுதுணிக்கை - Red Blood Cells (RBC)
2. வெண்குருதிச் சிறுதுணிக்கை - White Blood Cells(WBC)
3. குருதிச்சிறுதட்டுக்கள்
- Platelets
குருதித்திரவவிழையம்
குருதித்திரவவிழையம் வைக்கோல் நிறமான பாய்மமாகும்.
அது 90% நீரையும் 10% தொங்கல் நிலையிலான கூறுகளையும் கொண்டது.
தொங்கல் நிலையிலுள்ள பதார்த்தங்களை உடல்முழுவதும் கொண்டு செல்ல திரவவிழையத்தில் உள்ள நீர் இன்றியமையாததாகும்.
குளோபியூலின், அல்புமின், புரோத்துரொம்பின், பைபிரினோஜன் போன்ற குருதிப்புரதங்களும், கனியுப்புக்களும் தொங்கற் கூறுகளாகும்.
புரோத்துரொம்பின், குருதி உறைதலுக்கு உதவும் குருதிப்புரதமாகும்.
செங்குருதிச் சிறுதுணிக்கை - Red Blood Cells (RBC)
7µm விட்டமுடையது.
இதனுள் Heamoglobin எனும் செந்நிறப்பதார்த்தம் காணப்படும். இது காரணமாகவே குருதி செந்நிறமாகக் காணப்படுகின்றது.
ஒரு கன மில்லிலீற்றர் குருதியில் 5000000 செங்குருதிக் கலங்கள் காணப்படும்.
ஒரு துளிக்குருதி அண்ணளவாக 50mm3 கனவளவு கொண்டதாகும்.
இவை சுவாசப்பையில் O2 ஐப் பெற்று உடற்கலங்களுக்கு வினியோகித்தல். – Oxy Heamoglobin ( ஒட்சி ஹீமோகுளோபின்)
உடற்கலங்களில் இருந்து உருவாக்கப்படும் CO2 ஐச் சேகரித்து சுவாசப்பை களை நோக்கி எடுத்துவரல் - Carboxy Heamoglobin ( காபொட்சி ஹீமோகுளோபின்)
செந்நிறமான Heamoglobin பதார்த்தம் RBC கலங்களின் குழியவுருவில் கரைந்துள்ளது.
இவை கருவற்றவை. இதனால் Heamoglobin ஆனது RBC கலத்தினுள் இருப்பதற்கு அதிக இடம் கிடைக்கிறது.
இவை பொதுவாக செவ்வென்பு மச்சையில் உருவாகி ஈரலில் அழிவுறுகின்றன.
120 நாட்கள் வாழ்தகவு உடையது.
வெண்குருதிச் சிறுதுணிக்கை - White Blood Cells(WBC)
5 வகையானWBCகள் உண்டு.
இவை சிறுமணி கொண்டவை, சிறுமணியற்றவை என இருவகையாகப் பிரிக்கலாம்.
கரு கொண்டவை
பொதுவாக வாழ்நாள் குறைந்தவை.
RBC ஐ விடப் பருமனில் பெரியவை.
எண்ணிக்கையில் குறைந்தவை (RBC: WBC = 600:1)
உற்பத்தியாகும் இடங்கள்
1. என்புமச்சை/ என்புமச்சையில் உள்ள தண்டுக்கலம் (அடிக்கலம்)
2. நிணநீர் இழையத்திலுள்ள ஞாபகக்கலம்/ நிணநீர் இழையம்.
குருதிச்சிறுதட்டுக்கள் (Platelets)
இது மென்சவ்வால் சூழப்பட்ட கலப்பகுதியாகும். ஆகவே கரு காணப்படுவதில்லை.
குருதி உறைதலுக்கு இவை அவசியம்.
பொதுவாக ஒரு கனமில்லி லீற்றர் மனிதக்குருதியில் 250000 குருதிச்சிறு தட்டுக்கள் காணப்படும்.
இவை செவ்வென்பு மச்சையில் உருவாகி ஈரலில் அழியும்.
Note:-
1. குருதி ஒரு திரவ இழையமாகும்.
2. விலங்குகளின் உடல்நிறையில் 40% தசையிழையமாகும். சுருங்கும் ஆற்றல் கொண்ட சிறப்பியல்புடைய கலங்களால் தசையிழையங்கள் ஆக்கப்பட்டுள்ளன.
3.உடலின் அக,புற மேற்பரப்புக்கள் தளமேலணி இழையத்தினால்
மூடப்பட்டிருக்கும். மேலும் தனிக்கலப்படையால் ஆக்கப்பட்ட எளிய
மேலணி இழையம் பல்கலப்படையால் ஆக்கப்பட்ட கூட்டு இழையம் என்ற
இருவகைகளாக அவை உடலில் அமைந்துள்ளன.
No comments:
Post a Comment