1. பக்ற்ரியாக்கலம்
2. தாவரக்கலம்
3. விலங்குக்கலம்
கலங்களின் ஒளி
நுணுக்குக்காட்டித் தோற்றம்
பக்ற்ரியாக்கலங்கள்
- Eg :- தயிர்க்கரைசல்
தாவரக்கலங்கள் - Eg
:- மேற்றோல் உரி ,வெங்காய உரி
விலங்குக்கலங்கள் - Eg
:- கன்னக்கலங்கள்
கலங்களின் இலத்திரன் நுணுக்குக்காட்டித் தோற்றம்
பக்ற்ரியாக்கலம்
கலங்களின் இலத்திரன் நுணுக்குக்காட்டித் தோற்றம்
பக்ற்ரியாக்கலம்
புறோக்கரியோட்டா கலவமைப்புடையது.
இவற்றின் கலச்சுவர்
மியூக்கோபெப்ரைட்டு அல்லது பெப்ரிடோகிளைக்கோன்
அல்லது மியூரின் என்பவற்றினால் ஆக்கப்பட்டது.
1.தாவர இலையின் கீழ்ப்புற மேற்றோலில் இருந்து
மெல்லிய மெல்லிய
மேற்றோலுரியைப் பெற்றுக்
கொள்க.
2. அம்மேற்றோலுரியை மணிக்கூட்டுக்
கண்ணாடியிலுள்ள நீரில்இடுக.
3. இம்மேற்றோலுரியை நீர்த்துளியுடன் சேர்த்து
தூரிகையினால் எடுத்து
வழுக்கியில் ஏற்றுக.
4. வளி சிறைப்படாத வகையில் மூடித்துண்டால்
மேற்றோலுரியை மூடுக.
5. பின்னர் நுணுக்குக் காட்டியின் தாழிவலுவின்
கீழ் அவதானிக்குக.
6. பின் அம்மேற்றோலுரியை உயர்வலுவின் கீழ்
அவதானிக்குக.
7. இறுதியில் அவதானித்த பகுதிகளை வரிப்படத்தில்
குறிக்குக.
வாய்க்குழியின் மேற்றோல்
பகுதியில் உள்ள கன்னக்கலங்களை ஒளிநுணுக்குக்காட்டியினூடாக உருப்பெருக்கி
அவதானித்தல்
உங்கள் வாய்க்குழியின் மேற்பகுதியில் உள்ள கன்னப்பகுதியை யோக்கட் கரண்டியினால்
சுரண்டுவதன் மூலம் கன்னக்கலங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
கலத்தினுள் காணப்படும் கருவும் சிறுமணியுருவான அமைப்புக்களும் ஒருங்கே முதலுரு எனப்படும்.
கலமுதலுருவைச் சுற்றிவர முதலுருமென்சவ்வு/கலமென்சவ்வு காணப்படும்.
தாவரக்கலத்திற்கும் விலங்குக்கலத்திற்கும் இடையிலான
வேறுபாடுகள்
தாவரக்கலம்
|
விலங்குக்கலம்
|
1. பச்சையவுருமணியைக்
கொண்டவை.
|
1. பச்சையவுருமணியற்றவை.
|
2. கலச்சுவரைக்
கொண்டவை.
|
2. கலச்சுவர்
அற்றவை.
|
3. புன்மையத்தி
அற்றவை.
|
3. புன்மையத்தி
கொண்டவை.
|
4. கலத்தின் வெளிப்புற எல்லை
கலச்சுவர்
|
4. கலத்தின் வெளிப்புற
எல்லை
முதலுரு மென்சவ்வு
|
5. கரு
ஓரப்பகுதிக்கு
தள்ளப்பட்டுக் காணப்படும்.
|
5. கரு மத்தியில்
காணப்படும்.
|
No comments:
Post a Comment