Tuesday, June 2, 2015

அக ஒன்றிய வாழ்வுக்கொள்கை(Endo symbiosis)

இயூக்கரியோற்றாக் கலங்களில் காணப்படும் பச்சையவுருமணிகள், இழைமணிகளினுடைய கூர்ப்புடன் சம்பந்தப்பட்ட கொள்கை
இயூக்கரியோற்றாக்கலங்களினுடைய பச்சையவுருமணிகளும், இழைமணிகளும் பற்றீரியாக்களுடன்/ புரோக்கரியோற்றாக்களுடன் சில கட்டமைப்பு ஒற்றுமைகளைக் காட்டுகின்றன.
அவை 70S வகைக்குரிய இரைபோசோம்கள்
வட்ட DNA என்பன இழைமணி, பச்சையவுருமணி என்பவற்றில் உள்ளது போன்று பற்றீரியாக்களில்/ புரோக்கியோற்றாக்களில் உள்ளன.
பச்சையவுருமணிகள், இழைமணிகள் என்பன இரட்டை மென்சவ்வைக் கொண்டவை.
அத்துடன் இவை சுயாதீனமாக இரட்டிப்படையக் கூடியன.
இவ்வியல்புகள் பச்சையவுருமணி, இழைமணி என்பன சுயாதீன வாழ் பற்றீரியா/ புரோக்கரியோற்றாக் களிலிருந்து உருவாக்கப்பட்டன என விஞ்ஞானிகளை நம்பச் செய்கின்றன.
ஆதியான இயூக்கரியோற்றாக் கலத்தால் விழுங்கப்பட்ட பற்றீரியாக்கள்/ புரோக்கரியோற்றாக்கள் அக்கலத்தினுள் ஒன்றியவாழியாக வாழ்ந்து இழைமணி, பச்சையவுருமணிகளாகக் கூர்ப்படைந்தன. என இக்கொள்கை விளக்குகிறது.

No comments:

Post a Comment