உடலின் வெளிமேற்பரப்பு, உள்மேற்பரப்பு, குழிகள், குழாய்கள் போன்ற வற்றைப் போர்த்திக் காணப்படும் இழையம் மேலனி இழையம் எனப்படும்.
புறத்தோற்படை/ இடைத்தோற்படை/ அகத்தோற்படையில் இருந்து உருவா க்கப்படும்.
குறித்த இடத்தில் காணப்படும் மேலனி இழையம் ஏதாவது ஒரு மூலவுயிர் ப்படையில் இருந்து மாத்திரம் உருவாக்கப்படும்.
மேலணி இழையத்தின் வகைகள்
கலத்தின் வடிவத்தில் கட்டமைப்பின் அடிப்படையில்
1. செதில் மேலணி/ எளிய மேலணி
2. செவ்வகத்திண்ம மேலணி
3. கம்ப மேலணி
4. பிசிர் கொண்ட மேலணி
தொழிலின் அடிப்படையில்
1. மூடுமேலணி - உடற்பாகங்களை மூடியிருக்கும்
2. சுரப்பு மேலணி - பதார்த்தங்களைச் சுரக்கும்
3. புலன் மேலணி - தூண்டல்களை உணரும்.
எளிய செதில் மேலணி
அடித்தள மென்சவ்வின் மீது ஓரு கலப்படையில் செவ்வக வடிவான கலங்கள்
அடுக்கப்பட்டிருக்கும்.
காணப்படும் இடங்கள்
ஈரல், சதையீ, தைரொயிட் சுரப்பி, கெல்லேயின் இறங்கு புயம் தவிர்ந்த பாகங்கள்,
ஏனைய சிறுநீர் அகத்தியின் பாகங்கள், சேர்க்கும் கான், உமிழ் நீர்ச்சுரப்பிகள்,
வியர்வைச் சுரப்பிக்கான்
எளிய கம்ப மேலணி
அடித்தள மென்சவ்வின் மீது கம்பவடிவான கலங்கள் ஓரு கலப்படையில் அடுக்கப்பட்டிருக்கும்.
காணப்படும் இடங்கள்
இரப்பை தொடக்கம் நேர்குடல் வரையான உணவுக்கால்வாயின் பாகங்கள்
Note :- சடைமுளைகளில் உள்ள கம்ப மேலணிக் கலங்களின் சுயாதீன
மேற்பரப்பில் தூற்று அருகுகள்/ நுண்சடைமுளைகள் காணப்படும்.
பிசிர் கொண்ட எளிய கம்ப மேலணி
அடித்தள மென்சவ்வின் மீது கம்பவடிவான கலங்கள் காணப்படும்.
இக்கலங்களின் சுயாதீன மேற்பரப்பில் பிசிர்கள் காணப்படும். இக்கலங்களுக் கிடையே
பிசிர்கள் அற்ற கெண்டிக்கலங்கள் காணப்படும்.
கெண்டிக்கலங்கள்
- சீதத்தைச் சுரக்கும்
காணப்படும் இடங்கள்
பலோப்பியன் குழாய், சுவாசக்குழாய்
போலிப்படை கொண்ட மேலணி
கலங்களின் உயரம் வேறுபடும். எனவே அவை வெவ்வேறு படைகளில் இருப்பது போன்று
தோற்றமளிக்கும்.
எல்லாக்கலங்களும் அடித்தள மென்சவ்வின் மீது அடுக்கப்பட்டிருக்கும். எனினும்
எல்லாக் கலங்களுக்கும் சுயாதீன மேற்பரப்பு காணப்படமாட்டாது.
காணப்படும் இடங்கள்
சிறுநீர்வழி
பிசிர் கொண்ட போலிப்படை மேலணி
போலிப்படை கொண்ட மேலணியை ஒத்தது. எனினும் சுயாதீன விளிம்புகளில் பிசிர்கள் காணப்படும். இடையிடையே பிசிர்கள் அற்ற கெண்டிக்கலங்கள் காணப்படும்.
காணப்படும் இடங்கள்
வாதனாளி
கூட்டு மேலணி
அடித்தள மென்சவ்வின்மீது பல படைகளில் கலங்கள் அடுக்கப்பட்டிருக்கும்.
இரு வகைப்படும்
1. படை கொண்ட மேலணி
2. நிலைமாறும் மேலணி/ கடப்பு மேலணி
படை கொண்ட மேலணி
பிசிர் கொண்ட போலிப்படை மேலணி
போலிப்படை கொண்ட மேலணியை ஒத்தது. எனினும் சுயாதீன விளிம்புகளில் பிசிர்கள் காணப்படும். இடையிடையே பிசிர்கள் அற்ற கெண்டிக்கலங்கள் காணப்படும்.
காணப்படும் இடங்கள்
வாதனாளி
கூட்டு மேலணி
அடித்தள மென்சவ்வின்மீது பல படைகளில் கலங்கள் அடுக்கப்பட்டிருக்கும்.
இரு வகைப்படும்
1. படை கொண்ட மேலணி
2. நிலைமாறும் மேலணி/ கடப்பு மேலணி
படை கொண்ட மேலணி
அடித்தள மென்சவ்வின் மீது பல படைகளில் கலங்கள் அடுக்கப்பட்டிருக்கும்.
அடித்தளத்தில் உள்ள கலங்கள் மாத்திரமே அடித்தள மென்சவ்வுடன்
தொடுகையுறும்.
கலப்படைகள் ஓன்றுக்கொன்று சாமாந்தரமாக அடுக்கப்பட்டிருக்கும்.
அடித்தள மென்சவ்வுடன் தொடுகையுறும் கலங்கள் கம்பவடிவில் காணப்படும்.
மேல்நோக்கிச் செல்லும் போது கலங்கள் படிப்படியாகத் தட்டையாகும். இம்மேலணி அதி
வெளிப்புறத்தில் செதில்மேலணிக்கலங்கள் காணப்படும்
இரு வகைப்படும்.
1. கெரற்றின் ஏற்றப்பட்டது/ கொம்புருவாக்கப்பட்டது.
2. கெரற்றின் ஏற்றப்படாதது/ கொம்புருவாக்கப்படாதது.
கெரற்றின் ஏற்றப்பட்ட மேலணி
இம்மேலணி அதிவெளிப்புறமாகக் காணப்படும் இடங்களில் கெரற்றின் புரதம்
சேர்க்கப்பட்டிருக்கும். எனவே அதி வெளிப்புறமாகக் காணப்படும்.
கலங்கள் இறந்தவை
காணப்படும் இடங்கள்
மேற்றோல், நகம், மயிர்கள்
கெரற்றின் ஏற்றப்படாத மேலணி
கலங்களில் கெரற்றின் புரதம் இல்லை எனவே இம்மேலணியின் எல்லாக்கலங்களும்
உயிருள்ளவை.
காணப்படும் இடங்கள்
வாய்க்குழி மேலணி, தொண்டை, களத்தின் முன்பகுதி, குத வழி, யோனி வழி,
பிணிக்கை
நிலைமாறும் மேலணி/ கடப்பு மேலணி
மூன்று/ நான்கு படைகளில் கலங்கள் அடுக்கப்பட்டிருக்கும்.
எல்லாக்கலங்களும் ஒரே வடிவானவை/ பேரிக்காய் வடிவம்.
இம்மேலணி இழுவைக்குட்படும் போது கலங்களின் உயரம் மாற்றமடையும்.
நச்சுத் தன்மையைத் தாங்கக் கூடியவை.
கனவளவு கூடிக்குறையும் இடங்களில் காணப்படும்.
காணப்படும் இடங்கள்
சிறுநீர்ப்பை, சிறுநீரக இடுப்பு, சிறுநீர்வழி
Very Useful information
ReplyDelete