20Hz - 20,000Hz இற்கு இடைப்பட்ட மீடிறனைக் கொண்ட ஒலியதிர்வுகளையே மனிதக் காதினால் உணர முடியும். எனவே 20,000Hz இற்கு மேற்பட்ட மீடிறனைக் கொண்ட ஒலியே கழியொலி என அழைக்கப்படும்.
இதனை மனிதனால் கேட்க முடியாது ஆனால் வெளவால், நாய், பூனை, நுளம்பு போன்ற
அங்கிகளால் உணரமுடியும்.
பூக்கள் மலரும் போது கழியொலி பிறப்பிக்கப்படுகின்றது.
கழியொலியின் பயன்பாடுகள்
1. வெளவால் கழியொலியைப் பிறப்பித்து அதன் தெறிப்பொலியைக் கேட்பதன்
மூலம் முன்னால் உள்ள தடைகளை அறிந்து அதில் மோதாமல் பறக்க
முடிகின்றது.
2. உடலின் உள்ளுறுப்புக்களின் தொழிற்பாடு மற்றும் மாற்றங்களைக்
கண்டறிய கழியொலி உதவுகின்றது.
3. வீட்டில் தொல்லை தருகின்ற கரப்பான், நுளம்பு, எலி போன்ற அங்கிகளை
விரட்ட இக்கழியொலியைப் பிறப்பிக்கின்ற கருவிகள்
உபயோகிக்கப்படுகின்றன. ஆனால் இதன் காரணமாக வீட்டில் வசிக்கும்
நாய், பூனை போன்ற அங்கிகளும் வீட்டை விட்டு ஓடும் நிலை ஏற்படும்.
No comments:
Post a Comment