Thursday, August 11, 2022

சேதன இரசாயனவியல்

 சேதன இரசாயனவியல் பற்றிய அறிமுகம்

ஆரம்ப காலங்களில் உயிர் அங்கிகளில் இருந்தே சேதனச் சேர்வைகள் உருவாகுவதாக கருதப்பட்டது. ஆனால் உயிர் அங்கிகளுக்கு வெளியிலும் சேதனச் சேர்வைகள் உருவாக்கப்படலாம். எனச் செய்து காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, அசேதனச்சேர்வை ஒன்றில் இருந்து முதலில் உருவாக்கப்பட்ட சேதனச் சேர்வை CO(NH2)2 - யூரியா ஆகும். 

இச்சேர்வையை முதலில் உருவாக்கியவர் Wohler என்பவராவார்.

Note:- 

 1. மூலகங்களில் இருந்து முதலில் உருவாக்கப்பட்ட சேதனச்சேர்வை 

    CH3COOH ஆகும். இது Kolbe என்பவரால் உருவாக்கப்பட்டது.

2.காபனையும் அதன் சேர்வைகளையும் பற்றிய  இரசாயனமாகையால் இது காபன் இரசாயனம் எனவும் அழைக்கப்படுகின்றது.

3. அனேகமான சேதனச் சேர்வைகள் உயிர் அங்கிகளில் இருந்தே உருவாகின்றது. 

No comments:

Post a Comment