காபன் அதிக எண்ணிக்கையான சேதனச்சேர்வைகளை உருவாக்குவதற்கான காரணங்கள்
1. காபன் அணு இலத்திரன்களை ஏற்றோ அல்லது இழந்தோ பிணைப்புக்களை ஏற்படுத்துவதை விட பலமான பங்கீட்டுவலுப் பிணைப்பைத் தோற்றுவிப்பதிலேயே அதிக நாட்டத்தைக் காட்டுகின்றது.
2. காபனின் நால்வலுவளவுத் தன்மைக் காட்டும் தன்மை
3. காபன் தனது அணுக்களுடனும், வேறு அணுக்களுடனும் இரட்டை, மும்மைப் பிணைப்புக்களைத் தோற்றுவிக்கக் கூடியது.
4. காபன் அணுக்களின் தொடர் பிணைப்பாக்கும் தன்மை, இதனால் நீளவடிவான, சங்கிலி, கிளைகொண்ட சங்கிலி, வளையச் சேர்வைகளையும் உருவாக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றது.
Note:-
1. சேதனச் சேர்வைகளில் காணப்படும் மூலகங்களின் அளவு ரீதியான ஒழுங்குC > H > O > N > Cl > Br > I > F > S > P எனக் காணப்படும்.
2. சில சேதனச் சேர்வைகளில் உலோகங்களும் காணப்படுகின்றன.
3. சேதனச் சேர்வையைத் தொடர்ந்து வெப்பமாக்கும் போது திண்ம மீதி பெறப்படு மாயின் அதில் உலோகம் உண்டெனலாம்.
No comments:
Post a Comment