Friday, June 9, 2023

கல்விச்சேவை

மாணவர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்

இலங்கை முமுவதும் தமிழ் மொழி மூலம் பின்வரும் பாடங்களை பயிலும் மாணவர்களுக்கான இலவசமான வாய்ப்பு

பாடக் குறிப்புகள், மீட்டல் வினாக்கள் www.padippu.lk எனும் எமது இணையத்தளத்தின் மூலமும், பாடங்களுக்கான கற்பித்தல் நுட்பங்கள் Tutor Sureshkumar  எனும் எமது YouTube Channel ஊடாகவும்  தங்களுக்கு எதிர்வரும் 19.06.2023 ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக வெளியிடுவதற்கு ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.

எனவே மாணவச் செல்வங்கள் அனைவரும் இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி முன்னேற்றகரமான பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

1. இரசாயனவியல் (Chemistry)

2. பௌதீகவியல் (Physics)

3. உயிரியல் (Biology)

4. தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் (Science for Technology)

5. விஞ்ஞானம் (Science) தரம் - 09-11 வரை

6. கணிதம் (Maths) தரம் - 09-11 வரை

குறிப்பு

1. மேற்படி பாடங்களில்  திறமை மிக்க ஆக்கங்களை  வெளியிடுவதற்கு காத்திருக்கும் ஆசிரியர்கள்  எம்முடன் தொடர்பு கொண்டு தமது ஆக்கங்களை எமது www.padippu.lk இணையத்தளத்தில் பிரசுரிக்க  எமக்கு அனுப்பி வைக்கமுடியும் தரம் மிக்க ஆக்கங்கள் நிச்சமாக எமது இணையத்தளத்தில் பிரசுரிப்புச் செய்யப்படும். 

2. மாணவர்கள் தங்களுக்கு உடனடியாக தேவைப்படுகின்ற பாடப்பரப்புக்கள் தொடர்பாக எமக்கு அறியத்தருமிடத்து அது தொடர்பாக கூடிய கவனமெடுத்து வெளியிட நடவடிக்கை மேற் மெற்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment